கேப்டன் டிவியில் நள்ளிரவு நேரத்தில் ஒளிபரப்பாகும் ‘சமையல் மந்திரம்' நிகழ்ச்சிக்கு பயங்கர ஆண்களிடம் மட்டுமல்ல பெண்களிடமும் பயங்கர ரெஸ்பான்ஸ் இருக்கிறதாம். அந்த அளவிற்கு விரும்பி பார்க்க காரணம் சித்தவைத்தியர் அருண் சின்னையாவின் கைப்பக்குவம் என்கின்றனர்.
அவர் சமைக்கும் ‘இருக்கிப் பிடிக்கும் இலந்தை ஜாம்' ‘குட்டு வைக்கும் ரோஜா குல்கந்து' போன்றவைகளுக்கு வரவேற்பு அதிகம். மூட்டுவலிக்கு கடுகு சாதம், ஆண்மை வீரியம் பெற அமுக்கரா கிழங்கு, விந்து வளர்ச்சிக்கு ஆல் சர்க்கரை வள்ளிக்கிழங்கு, நரம்பு புத்துணர்ச்சிக்கு புடலங்காய் பொறியல், இடுப்பு பலம் பெற ஊளுந்து களி என அந்தரங்கச் சமையலில் அசத்துகிறார்.
அந்தரங்கம் பற்றிய எந்த கேள்வி வந்தாலும் அதற்கு சரியான சங்கோஜப்படாத பதில்களை சொல்வது இவரது சிறப்பம்சம். அதனால்தான் ஆண்களைப் போல பெண்களும் இந்த நிகழ்ச்சியை விரும்பி பார்க்கின்றனராம்.
நந்தினியின் தொகுப்பு
அந்தரங்கம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு சிலர் சங்கோஜப்படுவார்கள். ஏனெனில் அதில் பங்கேற்பாளர்கள் கேட்கும் ஏடாகூடாமான சந்தேகங்களுக்கு பதில் சொல்லவேண்டுமே? ஆனால் ‘சமையல் மந்திரம்' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் நந்தினி இதற்காக பெருமைப் படுவதாக கூறியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவும், நேயர்களின் கடிதங்களை வாசிக்கவும் கொஞ்சம் கூட கூச்சமில்லை என்கிறார் நந்தினி. ஏனெனில் செக்ஸ் என்பது இயற்கையான விசயம். அதில் ஏற்படும் சந்தேகங்களுக்கு நம்மால் தெளிவு ஏற்படுகிறதே என்பதில் மகிழ்ச்சிதானம் அவருக்கு.
சமையல் மந்திரம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு முதலில் நந்தினியின் வீட்டில் ஒத்துக்கொள்ளவில்லையாம். இப்போது நிகழ்ச்சிக்கு கிடைத்துள்ள வரவேற்பை பார்த்து ஓகே சொல்லிவிட்டார்களாம்.
முன்பு பாலியல் நிபுணர் மாத்ருபூதம், ஷர்மிளாவும் இணைந்து வழங்கிய அந்தரங்க நிகழ்ச்சியைப் போல சமையல் மந்திரம் நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது என்கின்றனர் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள்.
Post a Comment