குழந்தையின்மை சிகிச்சை மையம்... குஷ்பு, சுரேஷ் கோபி தொடங்கி வைத்தனர்!

|


சென்னை: நூறு சதவீதம் பெற்றோர்கள் மூலம் மட்டுமே குழந்தை பெற வழி செய்யும் கிராஃப்ட் மருத்துவமனையை சென்னை பல்கலைக் கழக துணை வேந்தர் மயில்வாகனன் நடராஜன் மற்றும் நடிகை குஷ்பு உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.

kushboo suresh gopi inaugurates craft hospital
Close
 
இவர்களுடன் நடிகைகள் சுஹாஸினி, நடிகர் சுரேஷ் கோபி ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

கருவுறாமைக்கான சிகிச்சையில் முன்னணி வகிக்கும் கிராஃப்ட் மருத்துவமனை & ஆய்வு மையம் தனது மையத்தைச் சென்னை கீழ்ப்பாக்கத்தில் சமீபத்தில் தொடங்கியது.

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் டாக்டர் மயில்வாகனன் நடராஜன் மருத்துவமனையைத் தொடங்கி வைத்தார்.

நடிகரும் சமூக ஆர்வலருமான சுரேஷ் கோபி ஆணுறுப்பு நோயியல் மற்றும் பாலியல் பிரிவுகளைத் திறந்து வைத்தார்.

பிரபல திரைப்பட நடிகைகளான சுஹாசினி மணிரத்னம் மற்றும் குஷ்பூ சுந்தர் ஆகியோர் லேபரோஸ்கோபி மற்றும் குழந்தையின்மைப் பிரிவுகளைத் தொடங்கி வைத்தனர்.

கிராஃப்ட் மருத்துவமனையில் அதி நவீன 'ஸ்டேட் ஆஃப் தி ஆர்ட்' நோய்க்குறி அறிதல் மற்றும் சகிச்சைக்கான கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. ஒரே கூரையின் கீழ் அனைத்து சிகிச்சைகளையும் அளிக்கும் வகையில் தன்னிறைவு பெற்ற மருத்துவ மையமாக கிராஃப்ட் விளங்குகிறது. முறையான சிகிச்சை மற்றும் பாதுகாப்பிற்கு அடிப்படையான நோய்க்குறி அறிதலுக்கு கிராஃப்ட் முழுமையான உத்தரவாதம் தருகிறது.

 

Post a Comment