ஆண்கள் பத்திரிகைக்காக படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த பாண்ட் 'கேர்ள்'!

|

Bond Girl Berenice Has Licence Thrill

லண்டன்: லேட்டஸ்ட் ஜேம்ஸ் பாண்ட் படத்தில் நடித்துள்ள பெர்னிஸ் மார்லோஹ், எப்எச்எம் பத்திரிக்கைக்காக படு கவர்ச்சிகரமான போஸ் கொடுத்துள்ளார்.

உடலை ஒட்டிய பிரா மற்றும் டிராயருடன் படு கலக்கலாக காட்சி தருகிறார் பெர்னிஸ்.

பெர்னிஸ்தான் ஸ்கைபால் படத்தில் ஜேம்ஸ் பாண்டை மயக்கும் மாய மோகினி பாத்திரத்தில் நடித்துள்ளார். பாண்டை அசரடிக்கும் பாத்திரத்தில் வரும் இவர் கொடுத்துள்ள போஸைப் பார்த்தால் பாண்ட் எப்படியெல்லாம் திணறிப் போயிருப்பாரோ என்ற ஏக்கம்தான் நிச்சயம் ரசிகர்களுக்கு வரும்.

பிரான்ஸைச் சேர்ந்தவர் பெர்னிஸ். ஸ்கைபால் படம் குறித்து பெர்னிஸ் கூறுகையில், இது ரொம்பவும் மர்மான கேரக்டர். அட்வென்ச்சரஸான ரோலில் நான் நடித்துள்ளேன். இந்த வேடத்திற்காக நான் நிறைய தியாகம் செய்துள்ளேன். மிகவும் செக்ஸியாகவும் நடித்துள்ளேன் என்றார்.

சரி உங்களுக்குப் பிடித்த பாண்ட் கேர்ள் யார் என்ற கேள்விக்கு ஜெனியா ஓடனாப்தான் மிகவும் பிடித்த பாண்ட் கேர்ள் என்று கூறியுள்ளார் பெர்னிஸ். பேம்கே கோல்டன்ஐ படத்தில் நடித்தவர்.

பெர்னிஸைப் பார்த்தால் உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது...?

 

Post a Comment