பிரபல தயாரிப்பாளர் ஏ. எம். ரத்னம்-பத்மஜா ஆகியோரின் மூத்த மகன் ஜோதிகிருஷ்ணா- ஐஸ்வர்யா திருமணம் இன்று காலை சென்னையில் உள்ள ஹோட்டலில் நடந்தது.
எனக்கு 20 உனக்கு 18, கேடி, ஊலலல்லா போன்ற படங்களை இயக்கியவர் ஜோதிகிருஷ்ணா. ஊலலல்லா படத்தில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.
அதன்படி இன்று மேளதாளம் முழங்க காலை சரியாக 10.12-க்கு மணப்பெண் ஐஸ்வர்யா கழுத்தில் தாலி கட்டினார்.
இயக்குனர்கள் ஷங்கர், விஷ்ணுவர்த்தன், ராம்கி, விஜயபத்மா, பாடகர் ஹரிஹரன், தயாரிப்பாளர்கள் அம்மா கிரியேசன் சிவா, ஞானவேல் ராஜா, கமீலா நாசர் உள்ளிட்டோர் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினர்.
உலகநாயகன் கமல்ஹாஸன், இந்தத் திருமணத்துக்கு நேரில் வந்து மணமக்களை வாழ்த்தி, பரிசளித்தார். கமல் நடித்த இந்தியன் படத்தைத் தயாரித்தவர் ஜோதிகிருஷ்ணாவின் தந்தை ஏஎம் ரத்னம் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment