சினிமாவை நன்கு புரிந்துகொண்டிருக்கிறேன். இயக்குனர்களிடம் எப்போதும் தொடர்பிலேயே இருந்தேன். கே.எஸ்.ரவிகுமார் சமீபத்தில் 'ஆப்ரிகாவில் வடிவேலு என்ற ஸ்கிரிப்டை எனக்கு கூறினார். பிடித்திருந்தது. ஒப்புக்கொண்டேன். இது எனக்கு புத்துணர்ச்சியை தந்திருக்கிறது. எனது ரசிகர்களை ஏமாற்றமாட்டேன். ஆப்ரிகாவில் இதன் ஷூட்டிங் நடக்க உள்ளது. 'இம்சை அரசன் படத்தின் 2ம் பாகம் படத்திலும் நடிக்க உள்ளேன், சந்தானம் பற்றி கேட்கிறார்கள். சினிமா துறை ஒரு கடல். திறமையானவர்களுக்கு எப்போதும் திரையுலகில் இடம்மிருக்கிறது. என்னைப் பொறுத்தவரை எனக்கு போட்டி நான்தான். விஷால் நடிக்கும் 'பட்டத்து யானை படத்தில் நடிக்க மறுத்தீர்களா என கேட்கிறார்கள். அந்த படத¢தில் நடிப்பது தொடர்பாக யாரிடமும் நான் பேசவில்லை. இவ்வாறு வடிவேலு கூறினார்.
Post a Comment