சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளாக இருந்தும், கொலவெறி பாடல் படு பிரபலமாகியும் தனது படத்தை இந்தி மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்த கஷ்டப்பட வேண்டியுள்ளதே என்று ஐஸ்வர்யா தனுஷ் தெரிவித்துள்ளார்.
43வது சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் பேசிய ஐஸ்வர்யா தனுஷ் கூறுகையில்,
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களை இந்தி மக்களிடம் விளம்பரப்படுத்துவதில் எனக்கு கஷ்டமாக உள்ளது. எனது குடும்பப் பின்னணி(சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள்) மற்றும் கொலவெறி பாடல் இன்டர்நெட்டை கலக்கிய பிறகும் எனது படத்தை இந்தி மக்களிடையே விளம்பரப்படுத்த நான் போராடினேன் என்றார்.
ஐஸ்வர்யா தனது கணவர் தனுஷ், தோழி ஸ்ருதி ஹாசனை வைத்து எடுத்த 3 படத்தின் மூலம் தான் இயக்குனர் அவதாரம் எடுத்தார். அந்த படத்தில் வந்த ஒய் திஸ் கொலவெறி பாடல் உலகப் பிரபலமானது. மக்கள் தங்கள் கவலைகளை எல்லாம் மறந்து பார்க்கும் வகையில் தான் படம் எடுப்பதாக ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.
ரஜினி மகளாக இருந்தும் ஐஸ்வர்யாவின் நிலைமையே இப்படி என்றால் எந்த பின்னணியும் இன்று புதிதாக வரும் இயக்குனர்களின் பாடை சொல்லவா வேண்டும்.
Post a Comment