சினிமாவில் குத்துப்பாடலுக்கு ஆட்டம் போட தயாராக இருப்பதாக களவாணி நாயகி ஒவியா அறிவித்துள்ளார்.
சினிமாவில் ஐட்டம் பாடலுக்கு ஆடுவதற்கு என்றே தனியாக நடிகைகள் இருந்த காலம் போய் ரோஜா, சிம்ரன், மீனா என ஒரு பாடலுக்கு இறங்கி வந்து ஆடினர். இவர்களைப் பார்ப்பதற்காகவே அந்த படத்தை பார்க்க ரசிகர்கள் வந்த காலமும் இருந்தது.
இதே முறையை இப்போது ஓவியாவும் பின்பற்றத் தொடங்கிவிட்டார் போல அதனால்தான் குத்துப்பாடலுக்கு ஆட நானும் ரெடிதான் என்று அறிவித்துவிட்டார்.
களவாணியில் கதாநாயகியாக நடித்தாலும், மன்மதன் அம்பு படத்தில் மாதவனின் அத்தை மகளாக சில காட்சிகளில் தலை காட்டினார் ஓவியா. அதில் வெறுத்துப்போய் ஓதுங்கியிருந்தவருக்கு கலகலப்பு கொஞ்சம் கை கொடுத்தது. இதன் தொடர்ச்சியாக விமலுடன் மூன்றாவது முறையாக சில்லுன்னு ஒரு சந்திப்பு படத்தில் நடித்து முடித்தார். இதற்குப் பின்னர் ஓவியாவிற்கு சொல்லிக்கொள்ளும் படியாக எந்தப் படமும் புக் ஆகவில்லை.
சொந்த ஊரான கேரளாவிற்கு சென்று இப்போது முழுநேர ஒய்வில் இருக்கும் ஓவியா, முன்னணி ஹீரோ படங்களில் குத்தாட்ட சான்ஸ் கிடைத்தாலும் தான் ஆட தயாராக இருப்பதாகவும் ஸ்டேட்மெண்ட் விட்டுள்ளார்.
முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்கும் இயக்குநர்கள் கவனித்து வாய்ப்பு தருவார்களா?
Post a Comment