சர்ச்சைகளை தவிர்க்க ஆன்லைனிலேயே படங்களின் தலைப்புகளைப் பதிவு செய்யலாமே!

|

Director Association Urges Online Registration சென்னை: இப்போதெல்லாம் ஒரு படம் திரைக்கு வர இரண்டு வாரம் இருக்கும்போது, படத்தின் தலைப்பை ஏற்கெனவே பதிவு செய்துவிட்டதாகக் கூறி, தடை கேட்டு யாராவது கிளம்புவார்கள்.

இதனைத் தவிர்க்க ஆன்லைனில் தலைப்புகளை பதிவு செய்யும் முறை கொண்டுவரப்பட வேண்டும் என நீண் நாட்களாக தயாரிப்பாளர்கள் கேட்டு வந்தனர்.

ஆனால் தயாரிப்பாளர் சங்கம் கண்டுகொள்வதாக தெரியவில்லை. இந்த நிலையில் இப்பிரச்சினையில் இயக்குநர்கள் சங்கம் தலையிட்டுள்ளது.

ஹரிஷ் கல்யாண், பூனம் சவுர் ஜோடியாக நடித்த கெஸ்ட் படத்தின் பாடல் வெளியீட்டு விழா பிரசாத் லேப்பில் நடந்தது. இதில் பங்கேற்று பேசிய இயக்குனர் ஜனநாதன் இதுகுறித்துப் பேசுகையில், "இந்த கெஸ்ட் படத்துக்கு 'அக்கம் பக்கம்' என பெயர் வைத்திருந்தனர். தயாரிப்பாளர் சங்கத்திலும் பதிவு செய்திருந்தார்கள்.

ஆனால் திடீரென்று இன்னொருவர் இதே பெயரை கில்டில் பதிவு செய்திருப்பதாக சொல்லி சொந்தம் கொண்டாடினார். இதனால் தலைப்பை 'கெஸ்ட்' என மாற்றியுள்ளனர்.

விஞ்ஞானம் எவ்வளவோ முன்னேறிய நிலையில் கூட படங்களின் தலைப்புகளை பழைய முறையிலேயே பதிவு செய்கிறோம். இதனால் கோர்ட்டு வரை செல்ல வேண்டி உள்ளது.

ஆந்திராவில் இந்த பிரச்சினை இல்லை. அங்கு ஒரே இடத்தில்தான் தலைப்பை பதிவு செய்கிறார்கள். ஆனால் இங்குதான் சேம்பர், தயாரிப்பாளர் சங்கம், கில்டு என மூன்று இடங்களில் பட தலைப்புகளை பதிவு செய்யும் முறை உள்ளது.

இதற்கு பதிலாக கம்ப்யூட்டர் ஆன்லைனில் தலைப்புகளை பதிவு செய்தால் சர்ச்சைகள் எழாது. இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு இயக்குனர் சங்கம் கடிதம் எழுதி உள்ளது," என்றார்.
 

Post a Comment