'கிரான்ட் பிராண்ட் ரஜினி': பிஸினஸ் மேனேஜ்மென்ட்டில் கலக்கும் இன்னுமொரு ரஜினி புத்தகம்!

|

ரஜினி எனும் பெயரை சத்தமின்றி பெரிய அளவில் வியாபாரமாக்கி வருகிறார்கள், வர்த்தக உலகில்.

grand brand rajini brand management
Close
 
இந்தியாவின் மிகப் பெரிய பிராண்ட் எதுவென்று மேனேஜ்மென்டில் உள்ள யாரைக் கேட்டாலும் கண்ணை மூடிக் கொண்டு ஒருவரது பெயரை உச்சரிப்பார்கள்... அது சூப்பர் ஸ்டார் அல்லது ரஜினி!

வர்த்தக உலகில் முக்கியமான மந்திரம்... பிராண்ட். அதை உருவாக்குவது அத்தனை சாதாரண விஷயமல்ல.

ஒரு நல்ல பிராண்ட் எப்போது மார்க்கெட்டில் அழியாப் புகழ், நம்பகத் தன்மையுடன் நிலைக்கும்?

நேர்மை, நீடித்த பயணம், நிலைத்தன்மை... இந்த மூன்றும் இருந்தால் மட்டுமே அது சாத்தியம்!

சினிமா உலகில் அப்படி ஒரு பிராண்ட் ஆக இன்றைக்குத் திகழ்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இதனை விளக்கும் வகையில் கிரான்ட் பிராண்ட் ரஜினி எனும் பெயரில் ஒரு புதிய புத்தகம் வெளியாகியுள்ளது. இதனை எழுதியிருப்பவர்கள் பிசி பாலசுப்பிரமணியம் மற்றும் ராம் என் ராமகிருஷ்ணன் ஆகியோர். ரஜினி என்ற கலைஞர் எப்படி இந்தியாவின் இணையற்ற பிரான்ட் ஆகத் திகழ்கிறார் என்பதை அவரது சினிமா வாழ்க்கையை மையப்படுத்தி எழுதியிருக்கிறார்கள்.

இவர்களில் பிசி பாலசுப்பிரமணியம் ஏற்கெனவே ரஜினியின் பஞ்ச் டயலாக்குகளை மையப்படுத்தி பஞ்ச் தந்திரம் எனும் பெயரில் புத்தகம் வெளியிட்டு புகழ்பெற்றவர். மாட்ரிக்ஸ் பிசினஸ் சர்வீஸஸ் எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். மற்றொருவர் ராம் என் ராமகிருஷ்ணன் ஒரு ஆடிட்டர்.

பிலிப்கார்ட்டில் இந்தப் புத்தகம் தள்ளுபடி விலையில் ரூ 105-க்கு கிடைக்கிறது.

இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

 

+ comments + 6 comments

muthu
21 November 2012 at 01:02

only superstar thalaivar rajni

saravanan
21 November 2012 at 01:03

superstar mass

dinesh
21 November 2012 at 01:04

world superstar rajni rockzzzzzzzzzzzzzzzzzzzzz

praveen
21 November 2012 at 01:04

engal thanga thalapathy rajni valga

alen
21 November 2012 at 01:06

superstar rajni rockzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz

siva
21 November 2012 at 01:06

mannan rajni valga

Post a Comment