சென்னை : சோழா கிரியேஷன்ஸ் சார்பில் பொன்னுரங்கம் தயாரிக்கும் படம், 'கபடம்'. சச்சின், சந்தோஷ், அங்கனா ராவ், ஹனிகா நடிக்கிறார்கள். சதீஷ்குமார் இசை. செல்வராகவன் உதவியாளர் ஜோதிமுருகன் இயக்குகிறார். படம்பற்றி அவர் கூறியதாவது: ஹீரோவுக்கு திருமணம் நிச்சயமாகிறது. நிச்சயித்த பெண்ணை ஹீரோ காதலிக்கிறார். கிராமத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும் நகரத்தில் பெரிய வேலையில் இருக்கும் ஹீரோயின் தன் கிராமத்து வாழ்க்கையை மறந்து நாகரீக வாழ்க்கைக்கு பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறாள்.
அதனால் அவளுக்கு பாரம்பரியத்தை விரும்பும் ஹீரோவை பிடிக்கவில்லை. நிச்சயதார்தத்தை முறிக்கத் திட்டமிடுகிறார். அதை ஹீரோ எப்படி சமாளிக்கிறார் என்பது கதை. சென்னைக்கு வரும் பெண்கள் வாழ்க்கை எப்படி மாறிப்போகிறது என்பதையும் அதனால் அவர்கள் இழக்கும் விஷயங்கள் பற்றியும் பேசும் படம். தெலுங்கில் 'கப்படம்' என்ற பெயரில் தயாராகி இருக்கிறது.
Post a Comment