ஏ.ஆர். ரஹ்மானின் இசை ஒரே இரைச்சல்: கிரிஷ் கர்னாட்

|

Girish Karnad Criticises Ar Rahman

பெங்களூர்: ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் வாத்தியங்களுக்கே தவிர வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. அதனால் அவரது இசையில் வார்த்தைகளே கேட்பதில்லை என்று எழுத்தாளரும், நடிகருமான கிரிஷ் கர்னாட் குற்றம்சாட்டியுள்ளார்.

டிரினிடாடைச் சேர்ந்த இந்திய வம்சாவழி எழுத்தாளரான வி.எலஸ்.நைபாலுக்கு நோபல் பரிசு கொடுத்திருக்கக் கூடாது என்று அண்மையில் நடந்த இலக்கிய விழா ஒன்றில் எழுத்தாளரும், நடிகருமான கிரிஷ் கர்னாட் தெரிவித்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவீந்திரநாத் தாகூர் ஒரு இரண்டாம் தர நாடக ஆசிரியர் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் இசையை குறை கூறியுள்ளார். பெங்களூரில் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நம் நாட்டு உருது கவிஞர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேசிய கர்னாட் ரஹ்மானின் இசையை சாடியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

ரஹ்மான் சிறந்த இசையமைப்பாளர். ஆனால் அவரது இசையில் வாத்தியங்களுக்கே தவிர வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. அதனால் அவரது இசையில் பாடல் வரிகள் கேட்பதில்லை. பாலிவுட்டில் உருது கவிதைகளுக்கு முக்கியத்துவம் இருந்தது. ஆனால் தற்போது இந்தி படங்களில் உருது கவிதைகள் இறந்துவிட்டன. அதற்கு ரஹ்மானைத் தான் குறை கூற வேண்டும் என்றார்.

 

Post a Comment