சென்னை: தேனாம்பேட்டையில் உள்ள நடிகை சோனா வீட்டை 100-க்கும் மேற்பட்டவர்கள் முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நடிகை சோனா சமீபத்தில் அளித்த பேட்டியில் ஆண்களை, துடைத்துப்போடும் பேப்பருக்கு சமம் என வர்ணித்திருந்தார்.
இதனால் ஆண்களின் கோபத்தை சம்பாதித்தார் சோனா. உடனே தான் அப்படி சொல்லவில்லை என பல்டியடித்தார்.
ஆனால் அவர் பேச்சை கேட்க ஆண்கள் தயாராக இல்லை. வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் அறிவித்தனர்.
சோனாவின் வீடு சென்னை தேனாம்பேட்டையில் உள்ளது. இந்த வீட்டை ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் இன்று திடீரென முற்றுகையிட்டனர். சோனாவுக்கு எதிராக கோஷமிட்டனர்.
ஆண்கள் குறித்து அவதூறாகப் பேசிய சோனா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வற்புறுத்தும் வகையில் கோஷங்கள் அமைந்தன.
சம்பவம் அறிந்ததும் போலீஸார் சோனா வீட்டுக்குச் சென்றனர். அங்கு கூடியிருந்தவர்களை கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர்.
Post a Comment