நடிகர் சிவா திருமணம்... முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

|

சென்னை: நடிகர் ஷிவா திருமணம், சென்னையில் நேற்று நடந்தது. மணமக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து செய்தி அனுப்பினார்.

தனியார் ரேடியோவில் அறிவிப்பாளராக ஆரம்பிதத்து, சென்னை-28 மூலம் நடிகராக அறிமுகமானவர் ஷிவா.

தொடர்ந்து சரோஜா, தமிழ்படம், கலகலப்பு ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

mirchi shiva marries priya cm greets the couple   
Close
 
இவருக்கும் இறகுப்பந்து வீராங்கனை ப்ரியாவுக்கும் கடந்த 5 வருடங்களாக காதல் இருந்து வந்தது. இவர்கள் திருமணத்துக்கு பெற்றோர்கள் சம்மதித்ததை தொடர்ந்து ஷிவா-ப்ரியா திருமணம் நிச்சயமானது.

இவர்கள் திருமணம் சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை மண்டபத்தில் வியாழக்கிழமை காலை நடந்தது. வைதீக முறைப்படி சரியாக 11-05 மணிக்கு ப்ரியா கழுத்தில் ஷிவா தாலி கட்டினார்.

மணமக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து செய்தியும், பரிசும் அனுப்பியிருந்தார்.

நடிகர் அஜீத்குமார், அவர் மனைவி ஷாலினி இருவரும் குழந்தை அனோஷ்காவுடன் திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். ஷாலினியின் தங்கை ஷாமிலி, அவர்களின் தந்தை பாபு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க துணைத் தலைவர் டி.சிவா, இயக்குநர்கள் கே.பாக்யராஜ், சுந்தர் சி, நடிகைகள் குஷ்பு, கஸ்தூரி உள்பட பலரும் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினர்.

 

Post a Comment