
இயக்குனர் ஷாஜி கைலாஷ் இயக்கியுள்ள மலையாள படம் ரிலீஸ் செய்ய முடியாமல் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவருக்கும் நடிகர் பிருத்விராஜுக்கும் தயாரிப்பாளர்கள் சங்கம் நோட்டீஸ் அனுப்பியது. தமிழில் 'வாஞ்சிநாதன், 'ஜனா ஆகிய படங்களை இயக்கியதுடன் பல்வேறு மலையாள படங்களை இயக்கியுள்ளார் ஷாஜி கைலாஷ். தற்போது 'மதராஸிÕ என்ற மலையாள படத்தை இயக்கி உள்ளார். ஜெயராம், மேக்னா ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை கடந்த அக்டோபர் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால் சம்பள பாக்கி பிரச்னை தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. எனவே ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. ஆனால் படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய முடிவு செய்த தயாரிப்பாளர், சம்பள பாக்கி தொடர்பாக கோர்ட்டுக்கு வெளியே பேசி தீர்த்துக்கொள்ள முடிவு செய்தனர்.
இதை மறத்த ஷாஜி கைலாஷ், 'இப்படியொரு பிரச்னையே இல்லை. கேரளாவில் நடந்த தியேட்டர்கள் ஸ்டிரைக்கால் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. இம்மாத இறுதியில் படம் ரிலீஸ் ஆகும் என்று குறிப்பிட்டார். இதற்கிடையில் மலை யாள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஷாஜி கைலாஷ் மற்றும் நடிகர் பிருத்விராஜீக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், கடந்த 2010ம் ஆண்டு சங்கத்துக்காக 'ரகுபதி ராகவ ராஜாராம் என்ற படத்தை இயக்குவதாக ஷாஜி கைலாஷ் கூறினார். அது பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த படத்தை அவர் முடித்துக்கொடுக்க வேண்டும் அல்லது புதிய படம் இயக்கி தர வேண்டும் என்று நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சங்க தலைவர் மிலன் ஜலில் தெரிவித்துள்ளார்.
Post a Comment