படங்களை ஒப்புக்கொள்ள மறுக்கிறார் பிரியாமணி

|

Priyamani refuses to accept movie புதிய படம் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை என்றார் பிரியாமணி. 'பருத்திவீரன் படம் பெரிய ஹிட் ஆனபோதும் பிரியாமணிக்கு தமிழில் ஒரு சில படங்களில் நடிக்கவே வாய்ப்பு வந்தது. இதனால் டோலிவுட் படங்களில் கவனம் செலுத்தினார். தொடர்ந்து மலையாளம், கன்னட படங்களில் நடித்தார். சமீபத்தில் கன்னடத்தில் அவர் நடித்த 'சாருலதா தமிழில் ரிலீஸ் ஆனது. இப்படத்துக்கு பிறகு மலையாள படங்களில் நடிக்க பிரியாமணி ஒப்புக்கொண்டிருக்கிறார் என்று தகவல் வெளியானது. இதை அவர் மறுத்தார்.

இது குறித்து அவர் கூறும்போது, 'நான் தற்போது நடிப்பிலிருந்து பிரேக் எடுத்திருக்கிறேன். எனது குடும்பத்தினருடன் நேரத்தை கழித்து வருகிறேன். இதற்கிடையில் கதைகளும் கேட்டு வருகிறேன். ஆனால் புதிய படங்களில் நடிக்க அவசரம் காட்டவில்லை. புதிய படங்களைப் பொறுத்தவரை மெதுவாகவே படங்களை ஒப்புக்கொள்ள முடிவு செய்துள்ளேன். மலையாளத்தில் கடைசியாக கிராண்ட் மாஸ்டர் என்ற படத்தில் நடித்தேன். அதன்பிறகு புதிய படங்களை ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகின்றன. ஆனால் புதிதாக எந்த மலையாள படத்திலும் நடிக்க நான் ஒப்புக்கொள்ளவில்லை என்றார்.
 

Post a Comment