கேப்டன் கட்சி சட்டமன்ற உறுப்பினர் தயாரிக்கற படத்துல காமெடி வேஷத்துக்கு வேலு காமெடிய பிக்ஸ் பண்ண கேட்டாராம்... கேட்டாராம்... ஏற்கனவே இருந்த மனக்கசப்பால நடிகர் நடிக்க மறுத்துட்டாராம். இதயடுத்து அந்த வேஷம் சந்தன காமெடிக்கு கைமாறிடுச்சாம். திடீர்னு கட்சிக்காரர் கேப்டனவிட்டு பிரிஞ்சிட்டாராம். இத காரணம் காட்டி வேலு காமெடியன்கிட்ட கால்ஷீட் கேட்டு வாங்கிட்டாராம். கட்சி தலைவருக்கும் வேலு நடிகருக்குமான மோதல்ல தனக்கு கால்ஷீட் கெடக்கலான்னு தயாரிப்பு நட்புங்ககிட்ட சொல்றாராம்... சொல்றாராம்...
சில இயக்கங்க ஹீரோவோட லந்து பண்றதுலயிருந்து சரக்கு அடிக்கறவர ஒட்டிகிட்டிருப்பாங்களாம்... இருப்பாங்களாம்... ஆனா காட்டன் வீர இயக்கம் எப்பவுமே இறுக்கமா இருப்பாராம். ஷூட்டிங் நேரத்துல காட்சிய விளக்கறதோட சரி அதுக்கப்பறம் ஹீரோவோட சிரிச்சி பேசறது, கமென்ட் அடிக்கறதுன்னு எந்த அரட்டைலயும் கலந்துக்க மாட்டாராம். இதால எந்த ஹீரோ அவர் படத்துல நடிச்சாலும் இயக்கத்தவிட்டு தள்ளியே நிப்பாங்களாம்... நிப்பாங்களாம்...
குறைஞ்ச பட்ஜெட்ல தயாரான ஆரோக பட ரிலீசுக்கு பின்னால பெரிய பிரச்னை நடந்துச்சாம்... நடந்துச்சாம்... பட ரிலீசுக்கு முதநாள் லேபுக்கு லெட்டர் கொடுத்து பிரின்ட் தரக்கூடாதுன்னு தடை போட்டுட்டாங்களாம். அந்த படத்த ரிலீஸ் பண்ற தயாரிப்பு ஏற்கனவே ஒரு மேட்டர்ல பாக்கி தர வேண்டி இருக்கு. அந்த பிரச்னை முடிஞ்சப்பறம்தான் பிரின்ட் தரணும்னு சொல்லிட்டாங்களாம். தகவல கேட்டு படத்த இயக்கன பெண் இயக்கம் அதிர்ச்சியாயிட்டாராம். சங்கத்து நிர்வாகிகிட்ட கெஞ்சற மாதிரி பேசினாராம். அவரோட அப்ரோச் பிடிச்சிருந்ததால தடைய நீக்கி பிரின்ட் தர கிரீன் சிக்னல் கொடுத்தாங்களாம்... கொடுத்தாங்களாம்...
+ comments + 1 comments
தூள் பண்ணுங்க
http://oorpakkam.com/thiraiseithi/1603-thuppaki-thirai-munnoddam
Post a Comment