பண்டரிபாயின் சகோதரி நடிகை மைனாவதி மரணம்

|

Actress Mynavathi No More

பெங்களூர்: பழம்பெரும் நடிகை மைனாவதி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 78.

இவர் நடிகை பண்டரியின் சகோதரி ஆவார். கர்நாடகத்தைச் சேர்ந்தவரான மைனாவதி தமிழிலும் கன்னடத்திலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். டி.ஆர்.மகாலிங்கம் ஜோடியாக இவர் நடித்த `மாலையிட்ட மங்கை' அதில் முக்கியமானதாகும்.

அந்தப் படத்தில் இடம் பெற்ற ''செந்தமிழ் தேன்மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்'' பாடலும் அதற்கு மைனாவதி ஆடிய நடனமும் இன்றும் பெரும் புகழ் கொண்டவை.

சில நாட்களாக மைனாவதிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு பெங்களூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், இன்று காலை மாரடைப்பால் காலமானார்.

மைனாவதியின் மகன் ஷ்யாம்சுந்தர் சமீபத்தில் காலமானார். இவர் கன்னடப் படங்களில் நடித்து வந்ததோடு டிவி தயாரிப்பாளராகவும் இருந்தார். அன்று முதலே மைனாவதியின் உடல் நிலை மோசமாகி வந்தது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment