
சென்னை : கீதாலயா மூவீஸ் சார்பில் கே.ஆனந்தன் நாயுடு தயாரிக்கும் படம், 'வெள்ளச்சி'. பாண்டு மகன் பிண்டு, சுசித்ரா உன்னி நடிக்கிறார்கள். வேலு விஸ்வநாத் இயக்கி உள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு பவதாரிணி இசை அமைத்துள்ளார். இதுபற்றி பவதாரிணி கூறியதாவது: இசையை முழுமையாக கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக கொஞ்சம் கால அவகாசம் எடுத்துக் கொண்டேன்.
இப்போது தீவிரமாக இசை அமைக்கத் தொடங்கி விட்டேன். வெள்ளச்சி கிராமத்து கதை என்பதால் இசைக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது. நான் கேட்டுக் கொண்டதால் யுவன் ஒரு பாடலை பாடியிருக்கிறார். இதுவரை 7 படங்களுக்கு மட்டுமே இசை அமைத்திருக்கிறேன். புதுமுக இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறேன். தொடர்ந்து பாடல்களும் பாடி வருகிறேன்.
Post a Comment