முஸ்லிம் ரசிகர்களை விலகச் சொல்வோம்... விஜய் நிகழ்ச்சிகளை முற்றுகையிடுவோம்! - தவ்ஹீத் ஜமாஅத்

|

Tauheed Jamaat Announces Protest Against Vijay

சென்னை: நடிகர் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அனைத்தையும் புறக்கணிப்போம் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுச்செயலாளர் கோவை.ஆர்.ரஹ்மதுல்லாஹ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "முஸ்லிம்களை இழிவுபடுத்தும் காட்சிகளை துப்பாக்கி படத்திலிருந்து நீக்குவதாக உறுதியளித்தனர் தயாரிப்பாளர் தாணுவும், இயக்குநர் முருகதாஸும்.

நடிகர் விஜய் சார்பில் அவரது தந்தை இந்த உறுதியை அளித்தார். ஆனால் இப்போது படத்தில் எந்தக் காட்சியையும் நீக்கவில்லை. மாறாக சில காட்சிகளில் ஒலியை டம்மியாக்கியுள்ளனர்.

இது இஸ்லாமிய மக்களை மேலும் புண்படுத்தும் செயலாகும். இந்த அளவுக்கு முட்டாளாக எங்கள் சமூகம் இல்லை என்பதை அவர்களுக்கு உணர்த்தும் வகையில், இனி விஜய்யின் மன்றங்களிலிருந்து அனைத்து முஸ்லிம் இளைஞர்களும் விலக வேண்டும் என்று வற்புறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப் போகிறோம்.

மேலும் இனி நடிகர் விஜய் எந்த நிகழ்ச்சியில் பங்கேற்றாலும், அங்கே தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும்," என்று தெரிவித்தார்.

 

+ comments + 2 comments

Anonymous
21 November 2012 at 18:58

pongada dubakoor....

Anonymous
22 November 2012 at 00:14

For Those Who Protest Against THUPAKKI:

போராட்ட காரர்களுக்கு என்னுடைய பணிவான கேள்வி ;

1 .பாகிஸ்தானில் மலாலா -விற்கு தலிபான்கள் பண்ணிய கொடுமையை எதிர்த்து ஏன் போராடவில்லை??
2 . மும்பையில் நடந்த பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதலை எதிர்த்து ஏன் போராடவில்லை??
3 . எத்தனை எத்தனை தீவிரவாத குண்டு வெடிப்புகள் இந்தியாவில் நடந்துள்ளன ..அதையெல்லாம் எதிர்த்து என்றாவது ஒரு போராட்டமாவது நடத்தியதுண்டா?
4 . உலகத்தில் எந்த மூலையில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டாலும் எதிர்த்து இங்கிருந்து குரல் கொடுப்பவர்கள், அல் கொய்தா உலகத்தின் பல நாடுகளில் நடத்திய தீவிரவாத தாகுதல்களை எதிர்த்து ஏன் குரல் கொடுப்பதில்லை ?

Post a Comment