திரையில் அழுது அழுது போரடித்துவிட்டது: தபு

|

மும்பை : திரையில் அழுது அழுது போரடித்துவிட்டது என்று தபு கூறினார். தமிழில் 'காதல் தேசம்', 'இருவர்', 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் தபு. 'லைஃப் ஆஃப் பை' உட்பட ஹாலிவுட் படங்களிலும் நடித்து வரும் அவர் கூறியதாவது: சமீபகாலமாக படங்களில் அதிகமாக காணமுடியவில்லையே என்று கேட்கிறார்கள். அது உண்மைதான். வருகின்ற கதைகளில் எல்லாம் நடித்துவிட முடியாது.

அந்த கட்டத்தைத் தாண்டி வந்துவிட்டேன். அது மட்டுமில்லாமல் இன்னும் என்னை நிரூபித்துக்காட்ட வேண்டிய அவசியம் இல்லை. என் நடிப்பு பற்றி எல்லோருக்கும் தெரியும். அதற்கு தகுந்த கதைகளை வரவேற்கிறேன். அல்லது என்னை குதூகலப்படுத்துகிற, ஆச்சரியப்பட வைக்கிற கதைகள் வந்தால் நடிக்க தயாராக இருக்கிறேன். சினிமாவில் அழுது அழுது போரடித்துவிட் டது. இன்னும் அழுதுகொண்டிருக்க விரும்பவில்லை. அதனால் இப்போதைக்கு ஒரு காமெடி அல்லது அதிரடி மசாலா கதையில் நடித்தால் கூட எனக்கு அது மாற்றத்தை தரும்.

 

Post a Comment