தயங்கிய ஹீரோ: தயங்காமல் 'இச்' கொடுத்த ஹன்சிகா

|

Hansika Surprises Siddharth   

சென்னை: ஜெயப்பிரதாவின் உறவினரான சித்தார்த் ஹீரோவாக நடிக்கும் படத்தில் சிறிதும் தயக்கமின்றி முத்தக் காட்சியில் நடித்து படக்குழுவினரை ஆச்சரியப்பட வைத்துள்ளார் ஹன்சிகா.

நடிகை ஜெயப்பிரதா தனது உறவினர் சித்தார்த் என்பவரை வைத்து தமிழில் à®'ரு படத்தை தயாரித்து வருகிறார். விஷால், நயன்தாரா நடித்த சத்யம் படத்தை இயக்கிய ராஜசேகர் தான் இந்த படத்தை இயக்குகிறார். தெலுங்கில் ஹிட்டான இஷ்க் படத்தின் ரீமேக் தான் இந்த படம் இதில் சித்தார்த் ஜோடி ஹன்சிகா.

இந்த படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் துவங்கியது. வழக்கமாக பூஜை காட்சியை முதல் காட்சியாக எடுக்கும் ராஜசேகர் இந்த படத்தில் முத்தக் காட்சியை எடுத்துள்ளார். முதல் காட்சியே முத்தக் காட்சி என்று கூறியவுடன் ஹீரோ சித்தார்த் சற்று ஆடிப்போய்விட்டார். எப்படி முத்தம் கொடுப்பது என்று அவர் தயங்கி நின்றபோது சற்றும் தயக்கமின்றி ஹன்சிகா அந்த காட்சியில் நடித்துக் கொடுத்துள்ளார் ஹன்சிகா.

ஹீரோவே தயங்கும்போது ஹன்சிகா இப்படி தயக்கமில்லாமல் முத்தக் காட்சியில் நடித்ததைப் பார்த்து படக்குழுவினர் ஆச்சரியப்பட்டார்களாம். பார்த்தால் அப்பாவியாக இருக்கும் ஹன்சிகா தைரியசாலி தான்.

 

Post a Comment