முஸ்லிம்கள் எதிர்ப்பு எதிரொலி... இன்று நடக்கவிருந்த துப்பாக்கி பிரஸ் மீட் ரத்து!

|

Thuppakki Press Meet Cancelled Due

இன்று நடக்கிவிருந்த துப்பாக்கி பட சக்ஸஸ் பிரஸ்மீட் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குக் காரணம் துப்பாக்கியில் இஸ்லாமியரை தீவிரவாதிகளாக சித்தரித்து படம் எடுத்திருப்பதால் எழுந்துள்ள சர்ச்சைதான் என்கிறார்கள்.

தீவிரவாதத்தைப் பற்றி படமெடுத்தாலே ஏன் முஸ்லிம்களை மட்டும் தீவிரவாதிகளாகச் சித்தரித்து அவமானப்படுத்துகிறீர்கள் என்று கோஷம் எழுப்பி விஜய் வீட்டை முஸ்லிகம்ள் முற்றுகையிட்டனர்.

இந்தப் போராட்டத்தில் 60 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் படத்தின் சக்ஸஸ் பிரஸ்மீட் இன்று சென்னை ரெயின் ட்ரீ ஓட்டலில் நடப்பதாக இருந்தது.

ஆனால் பிரஸ்மீட்டுக்கு வரும் செய்தியாளர்கள் யாராவது இந்த பிரச்சினை குறித்து கேள்வி எழுப்ப, அதற்கு பதிலளிக்கப்போய் சிக்கலில் சிக்கிக் கொள்வோமோ என பயந்து பிரஸ் மீட்டையே ரத்து செய்து விட்டார்களாம். தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த பிரஸ் மீட் ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நபிகளை அவமானப்படுத்தும் விதமாக படமெடுத்த ஹாலிவுட் டைரக்டரை கண்டித்து முஸ்லிம்கள் சென்னையையே ஸ்தம்பிக்க வைத்தது நினைவிருக்கலாம். ஒருவேளை துப்பாக்கி தயாரிப்பாளர்களுக்கு அந்த போராட்டம் நினைவுக்கு வந்துவிட்டதோ என்னமோ..!

 

Post a Comment