வன்முறை அதிகம் இருப்பதாக கூறி மீண்டும் சான்றிதழ் தர மறுத்தனர். ஒவ்வொரு காட்சிக்கும் விளக்கம் அளித்தேன். பிறகு தாங்கள் சொல்லும் காட்சிகளை வெட்டினால் ஏ சான்றிதழ் தருவதாக கூறினார். அதை ஏற்றுக்கொண்டோம். 35 சீன்களுக்கு கட் கொடுத்தார்கள். இதில் ஹீரோ, ஹீரோயின் ஜோடி காட்சியும் வெட்டப்பட்டது. வன்முறையை மையமாக கொண்ட படமாக இருந்தாலும் கடைசியில் அப்படி இளைஞர்கள் இருக்கக்கூடாது என்று சொல்லப்படுகிறது. தமிழ்செல்வன், பிரபாகரன், குட்டி ஆனந்த், விஜித், விக்கி, சாவந்திகா, சம்பத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். லோகியாஸ் இயக்கம். முருகேசன், ரவி தேவன் தயாரிப்பு. இவ்வாறு ரவிதேவன் கூறினார்.
Post a Comment