
சென்னை : 'அழகர்சாமியின் குதிரை', 'சகாக்கள்', 'கொண்டான் கொடுத்தான்' படங்களில் நடித்தவர் அத்வைதா. இவரும் கன்னட பட இசை அமைப்பாளர் அனு சீலினும் காதலித்து வந்தனர். இவர்கள் திருமணத்துக்கு இரு வீட்டாரும் சம்மதித்ததை அடுத்து கடந்த மாதம் பெங்களூரில் திருமணம் செய்து கொண்டனர். இதுபற்றி அத்வைதா கூறும்போது, 'சினிமா வேறு, சொந்த வாழ்க்கை வேறு என்பதால் என் திருமணத்துக்கு சினிமா தொடர்பானவர்களை அழைக்கவில்லை. திருமணம் ஆனாலும் தொடர்ந்து நடிப்பேன்' என்றார்.
Post a Comment