பால் தாக்கரே மரணம் நமது சூப்பர் ஸ்டார் ரஜினியை ரொம்பவே பாதித்துள்ளது.
அவரது உடல்நிலை குறித்து தொடர்ந்து விசாரித்து வந்த ரஜினி, இன்று பிற்பகல் தாக்கரே மரணம் அடைந்துவிட்டார் என்பது தெரிந்ததும் மிகுந்த வேதனையுடன் கண்ணீர் வடித்தாராம்.
முன்பு எந்திரன் படம் வெளியான சமயத்தில் மும்பை சென்ற ரஜினி, நேராக பால் தாக்கரே வீட்டுக்குப் போய் அவரைப் பார்த்து ஆசி பெற்றார்.
தனது தந்தைக்கு நிகரான பாசம் காட்டும் உயர்ந்த மனிதர் பால் தாக்கரே என்று ரஜினி அப்போது கூறியிருந்தார்.
ரஜினியைப் பற்றி எப்போதுமே மிக உயர்ந்த கருத்து கொண்டிருந்தார் பால் தாக்கரே. மும்பையில் உள்ள ஒவ்வொரு நட்சத்திரமும் சூப்பர் ஸ்டார் ரஜினியைப் பின்பற்ற வேண்டும். தான் வசிக்கும் மண்ணுக்கும் தன்னை நேசிக்கும் மக்களுக்கும் உண்மையாக இருப்பவர் ரஜினிகாந்த். அவர்தான் உண்மையான சூப்பர் ஸ்டார் என்று முன்பொரு சமயம் தாக்கரே ரஜினியைப் பாராட்டியிருந்தார்.
ரஜினியின் தமிழ்ப் படங்கள் இந்தியில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்தபோது, சிவசேனையின் ஆதரவு பூரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Post a Comment