எனக்குப் பிடிச்ச சினேகா... - பாலுமகேந்திரா

|

எனக்குப் பிடித்த நடிகை சினேகா. அவரை ஏன் பிடிக்கும் என்று விளக்கமாக சொல்ல முடியாது, என்றார் இயக்குநர் பாலுமகேந்திரா.

சினேகா, கிஷோர் நடித்து, ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கி, டாக்டர் வி.ராம்தாஸ் தயாரித்துள்ள படம் 'ஹரிதாஸ்'. இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று காலை நடந்தது.

sneha is my fav actress says balu mahendra
விழாவில் கலந்து கொண்டு பேசிய பாலு மகேந்திரா, ''இந்த படம் தந்தை மகனுக்கு இடையேயான கதை என்று கேள்விப்பட்டேன். ஒரு காலத்தில் தந்தை மகனுக்கு ஹீரோவாக இருக்கிறான். அப்புறம் தந்தைக்கு மகன் ஹீரோவாக இருக்கிறான்.

தந்தை மகன் உறவு, பவித்ரமானது. என் மூத்த மகன் பாலா, இன்னொரு மகன் வெற்றிமாறன், சீனுராமசாமி, ராம் ஆகியோரும் என் பிள்ளைகள்தான். இவர்கள் எல்லோருமே உலக தரத்தில் படங்களை இயக்குகிறார்கள். இதைவிட ஒரு தகப்பனுக்கு என்ன பெருமை வேண்டும்?

எனக்கு ரொம்ப பிடித்த நடிகை சினேகா. ஏன் என்று விளக்கம் சொல்ல முடியாது. கிஷோர், மிக சிறந்த நடிகர். இந்தியாவில் உள்ள மிகச் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் ரத்னவேல்,'' என்றார்.

விழாவில் இயக்குநர்கள் பாக்யராஜ், பாலா, சசி, கண்ணன், நடிகர்கள் விக்ரம், பிரசன்னா, கிஷோர், விஜய் ஆதிராஜ், இசையமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, ஒளிப்பதிவாளர் ரத்னவேல் ஆகியோர் பங்கேற்றனர்.

 

Post a Comment