கிசு கிசு - சிஸ்டர்ஸ் போட்டி

|

Kodambakkam Kodangi நல்ல காலம் பொறக்குது.. நல்ல காலம் பொறக்குது...

ஒரு எழுத்து படத்துக்கப்பறம் வந்த படங்கள்ல எத ஏத்துக்கலாம்னு கார்த்திகை நடிகை யோசனை பண்ணிட்டிருந்தாராம்... இருந்தாராம்... பாரதிகிங் பட வாய்ப்பு வந்ததும் ஓகே சொல்லிட்டாராம். பிரச்னைல சிக்கி ஷூட்டிங் முடிய நாளாயிடுச்சாம். இதுக்கிடைல அவரோட சிஸ்டர், பெல் இயக்கம் படத்துல் அறிமுகறாரு. ஆரம்பத்துல சிஸ்டர போட்டியா நெனக்கலையாம். ஆனா புதுசா தேடி வர்ர வாய்ப்புகள் சிஸ்டருக்குத்தான் வருதாம். இதுல அப்செட்டான அக்கா நடிகை தன் கவனத்த மல்லுவுட்டுக்கு திருப்பிட்டாராம்... திருப்பிட்டாராம்...

வருஷாவருஷம் சபரி மலைக்கு போற த்ரி ஹீரோவுக்கு மல ஏறின பலன் கெடச்சிருக்காம்... கெடச்சிருக்காம்... மல்லுவுட்ல மூட்டி நடிகர் படத்துல கெஸ்ட் ரோல் நடிக்க வந்த அழைப்ப ஏத்துக்கிட்ட ஹீரோ சமீபத்துல நடிச்சி கொடுத்தாராம். அதே வேகத்தோட மலைக்கு போன ஹீரோ கூடிய சீக்கிரம் மல்லுவுட்ல ஹீரோவா நடிக்க அருள்புரிய வேண்டிகிட்டாராம்... வேண்டிகிட்டாராம்...

தீபாவளி ரேஸுக்கு தயாராயிட்டிருந்த சாலம இயக்கத்தோட யான படம் அந்த போட்டிலயிருந்து ஜகா வாங்கி டிசம்பருக்கு தள்ளிடுச்சாம்... தள்ளிடுச்சாம்... திருப்தி இல்லாத சீன்கள ரீ ஷூட் முடிச்சவரு கிராபிக்ஸ் வேலய முடிச்சிட்டு ரீ ரெக்கார்டிங்க ஆரம்பிச்சட்டாராம். தீபாவளி சென்டிமென்ட்டுக்காக பஞ்ச் ஹீரோ படத்துலயும், இனிஷியல் ஹீரோ படத்தோடவும் யான பட டிரைலர சேத்து ஓட்ட ஏற்பாடு பண்ணிருக்காராம்... இருக்காராம்...
 

Post a Comment