வாய்ப்பு குறைந்தால் கவலை இல்லை : சமீரா ரெட்டி

|

I don't concern about the less chance : Sameera Reddy சென்னை: படங்களில் வாய்ப்பு குறைவதால் கவலை இல்லை என்றார் சமீரா ரெட்டி. 'வாரணம் ஆயிரம்', 'வெடி' உள்பட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் நடிகை சமீரா ரெட்டி. அவர் கூறியதாவது: ராணா, நயன்தாரா நடிக்கும் தெலுங்கு படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறேன். இந்த வாய்ப்பை ஏற்றது ஏன் என்கிறார்கள். குத்து பாடலுக்கு மட்டும் ஆட வேண்டுமென்றால் ஆடி இருக்க மாட்டேன். கதையோடு சேர்ந்து வரும் பாடலாக இது அமைந்திருக்கிறது. என்னுடன் வெங்கடேஷும்  ஆட உள்ளார். இதுவொரு கவுரவ தோற்றம் என்பதால் ஏற்றேன். இந்தி படங்களில் கரீனா கபூர், கேத்ரினா, வித்யா பாலன் ஆகியோரும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார்கள்.

அதெல்லாம் ஹிட்டாகி இருக்கிறது. இந்தியில் எனக்கும் நிறைய வாய்ப்புகள் வந்தன. அவைகளில் தேசிய விருது இயக்குனர் பிரகாஷ் ஜா படத்தில் வந்த வாய்ப்பை மட்டும் ஏற்றேன். 'டோலிவுட் படங்களில் ஹீரோயின்கள் கிளாமருக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறார்களே?' என்கிறார்கள். ஹீரோக்கள் ஆதிக்கம் உள்ள படவுலகில் அப்படித்தான் இருக்கும். இதை மாற்றுவதற்காக நான் வரவில்லை. கிளாமர் வேடங்களை நான் தவிர்ப்பதில்லை. படங்களில் வாய்ப்பு குறைந்துவிட்டதுபற்றி கவலைப்படுவதில்லை. சொல்லப்போனால் நிறைய வாய்ப்புகள் வருகிறது. அதில் பிடித்ததை மட்டுமே ஏற்கிறேன். விரைவில் குடும்பத்தினருடன் கிரிஸுக்கு செல்ல உள்ளேன். இவ்வாறு சமீரா ரெட்டி கூறினார்.
 

Post a Comment