நான்தான் சிறந்த நடிகர்

|

சென்னை : 'பரதேசி' படம் பற்றி நிருபர்களுக்கு பாலா அளித்த பேட்டி: 'பரதேசி' 1930,களில் நடந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் கதை. பிழைப்பு தேடி உள்நாட்டுக்குள்ளேயே அகதிகளாகவும், கொத்தடிமைகளாகவும் சென்ற மக்களின் கதை. நாவலைத் தழுவி எடுக்கப்படும் படம். நாமே கதை உருவாக்கி எடுப்பதை விட, நாவல்களை படமாக்குவது எளிதானது. படத்தின் ஹீரோவாக அதர்வாவை தேர்வு செய்ததற்கு காரணம்,

அவரது தோற்றம் கதைக்கு பொருத்தமாக இருந்ததோடு முரளியின் மகனுக்கு நான் செய்ய வேண்டிய கடமையாகவும் இருந்தது. என் படங்களில் நடிக்க ஹீரோக்கள் தயங்குவது தெரியும். வித்தியாசமான ஹேர்ஸ்டைல் வைத்து அழுக்கு மனிதனாக காட்டுவேன் என்பதால் பயப்படக்கூடும். என் படத்தில் நடித்த ஹீரோக்களில் யார் நல்ல நடிகர் என்று கேட்டால் எல்லோரையும் விட, நான்தான் நல்ல நடிகர். உங்கள் முன் நல்லவனாக நடித்துக் கொண்டிருப்பதால். இவ்வாறு பாலா கூறினார்.
 

Post a Comment