நேரு ஸ்டேடியத்தில் விஸ்வரூபம் இசை வெளியீடு!

|

Vishwaroopam Audio Release At Nehru Stadium   

சென்னை: கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படத்தின் இசை வரும் டிசம்பர் 2-ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடக்கிறது.

விஸ்வரூபம் படம் எப்போதோ முடிந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால் படத்தின் இசை உரிமை மற்றும் படத்தின் விநியோக உரிமை பிரச்சினை தொடர்ந்ததால், படம் வெளியாவது இதோ அதோ என தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது.

மேலும் இஸ்லாமிய அமைப்புகள் வேறு தொடர்ந்து இந்தப் படத்துக்கு மிரட்டல் விடுத்து வருகின்றன.

இந்த நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு உரிமையை சோனி நிறுவனம் பெற்றுள்ளது. சங்கர் எஷான் லாய் படத்துக்கு இசை அமைத்துள்ளார்.

படத்தின் இசையை கடந்த நவம்பர் 7-ம் தேதி கமல் பிறந்த நாளன்று, மதுரை, கோவை மற்றும் சென்னையில் நடத்தத் திட்டமிட்டனர். ஆனால் பருவநிலை சரியில்லை என்று கூறி அப்போது அந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டார் கமல்.

இப்போது ஆடியோ உரிமையை சோனி வாங்கிவிட்டதால், இசை வெளியீட்டுத் தேதியை உறுதிப்படுத்தியுள்ளார்.

வரும் டிசம்பர் 2-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.

 

Post a Comment