அதேபோல் தெலுங்கு படமொன்றிலும் நடிக்கிறேன். அதுவும் திகில் படம்தான். 'பூத் ரிட்டர்ன்ஸ் பட ஷூட்டிங்கில் திகில் காட்சிகளில் நடித்தபோது எனக்கு எந்த பயமும் ஏற்படவில்லை. இயக்குனர், பட குழுவினர் என்னை சுற்றியே இருந்ததால் பயம் தெரியவில்லை. இதே படத்தை தியேட்டரில் பார்த்தபோது நடுங்கிவிட்டேன். திகில் காட்சிகளில் எப்படி நடித்தேன் என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை. தமிழில் பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் எந்த கதையும் மனதை கவரவில்லை. இதையடுத்து மும்பையில் குடியேற முடிவு செய்திருக்கிறேன். அங்கேயே தங்கியிருந்து இந்தி படங்களில் கவனம் செலுத்த உள்ளேன். மும்பை எனக்கு நல்ல வரவேற்பு தந்திருக்கிறது. அதை அனுபவிக்கிறேன். இவ்வாறு மது ஷாலினி கூறினார்.
Post a Comment