இந்தி துப்பாக்கிக்கு பிறகு அஜீத்தை இயக்கும் முருகதாஸ்?

|

Ajith Murugadoss Film Almost Confirmed

சென்னை: இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் அஜீத் குமாரை மீண்டும் இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்று கூறப்படுகிறது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய முதல் படத்தின் ஹீரோ அஜீத் குமார். அதன் பிறகு அவர்கள் ஒன்று சேரவேயில்லை. இந்நிலையில் அஜீத்தை வைத்து படம் எடுக்க ஆசையாக இருப்பதாகவும், அவருக்காக ஸ்கிரிப்ட் கூட தயாரித்துவிட்டதாகவும் முருகதாஸ் அண்மையில் தெரிவித்திருந்தார். மேலும் அஜீத் கூறினால் கையில் உள்ள படத்தை விட்டுவிட்டு வரத் தயார் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அஜீத்தை முருகதாஸ் இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்று கூறப்படுகிறது. இந்த படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பார் என்றும் கூறப்படுகிறது.

அஜீத் குமார் தற்போது விஷ்ணுவர்தனின் பெயரிடப்படாத படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதன் பிறகு சிவா இயக்கத்தில் நடிக்கிறார். முருகதாஸ் தமிழில் ஹிட்டான துப்பாக்கியை இந்தியில் அக்ஷய் குமாரை வைத்து ரீமேக் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment