
பாய்பிரண்டை ஹீரோயின்கள் மறைக்கிறார்கள். அது தேவையில்லாதது என்றார் கரீனா கபூர். இது பற்றி அவர் கூறியதாவது: சைப் அலிகானை திருமணம் செய்வதற்கு முன்பே அவருடன் ஐந்தரை வருடம் வாழ்ந்தேன். இதை நாங்கள் மறைக்கவில்லை. பல ஹீரோயின்கள் தங்கள் பாய் பிரெண்டை மறைக்கிறார்கள். திருமணத்துக்கு முன்பே ஒரு ஜோடி சேர்ந்து வாழ முடியுமா என்பதை நான் பரிசோதித்து பார்த்துவிட்டேன். அது முடியும் என்பது தெரிந்தது. இதை நவீன கால இளைஞர்களுக்கு நான் தெளிவுபடுத்தி இருக்கிறேன். நான் நவநாகரீக பெண். எப்படி வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டேனோ அப்படி வாழ்கிறேன். சைப் கூட இதை வலியுறுத்துவார். பழங்கால சம்பிரதாயங்களில் உழன்றுக்கொண்டிருக்கக்கூடாது என்று அவர் கூறுவார்.
என்னை துரத்திக்கொண்டிருந்த மீடியாக்களும் மற்றவர்களும் எங்கள் திருமணத்துக்கு பிறகு அதை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். என் வாழ்க்கையை சினிமா மட்டுமே முடிவு செய்வதில்லை. அது என் வாழ்வில் ஒரு அங்கம். திருமணத்தால் சினிமா வாழ்க்கை பாதிக்கும் என்பதை ஏற்பதற்கில்லை. அழகாகவும், இளமையாகவும், திறமையுடன் இருந்தால் சினிமா நம்மை இழக்க விரும்பாது. ஹீரோயின் வாய்ப்புக்கும் திருமணத்துக்கும் சம்பந்தம் இல்லை. என்னைப் பொறுத்தவரை சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதுதான் திருமணம் செய்து கொண்டேன். எந்த ஒரு காரணத்துக்காகவும் எனது சினிமா ஈடுபாட்டை கைவிடக்கூடாது என்பதுதான் கணவர் சைபின் விருப்பமும். இவ்வாறு கரீனா கபூர் கூறினார்.
Post a Comment