இயக்குனர் ஜோதிகிருஷ்ணா-ஐஸ்வர்யா திருமணம்!

|

director jyoti krishna wed aishwary
Close
 
பிரபல தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் மகனும் இயக்குநருமான ஜோதிகிருஷ்ணா - ஐஸ்வர்யா திருமணம் வரும் நவம்பர் 23-ம் தேதி நடக்கிறது.

எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஜோதிகிருஷ்ணா. ஊலலல்லா படத்தில் ஹீரோவாக நடித்து இயக்கினார்.

இந்த நிலையில் அவருக்கும் ஐஸ்வர்யா என்வருக்கும் திருமணம் நிச்சயமானது. இருவரின் திருமணமும் வரும் நவம்பர் 23ம் தேதி திருமணம் நடக்கிறது. இந்த திருமணத்தில் மணமகன் - மணமகள் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொள்கின்றனர்.

அதன்பிறகு இருபத்தாறாம் தேதி திருமண வரவேற்பு. ஹைதராபாதில் பிரம்மாண்ட ஹோட்டலான லீலா பாலஸில் நடைபெறுகிறது. இதில் தெலுங்கு, ஹிந்தி, தமிழ் திரை உலகை சார்ந்த பிரபலங்கள் கலந்துகொள்கின்றனர்.

மணமகள் ஐஸ்வர்யாவும் ஒரு தீவிர சாய்பாபா பாகத்தை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment