செக் மோசடி வழக்கில் கவர்ச்சி நடிகை புவனேஸ்வரிக்கு பிடிவாரன்ட் பிறப்பி்த்துள்ளது மன்னார்குடி நீதிமன்றம்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த கோட்டூரை சேர்ந்த செல்வக்குமார் என்பவரின் நிதி நிறுவனத்தில் சின்னத்திரை நடிகை புவனேஸ்வரி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ரூ.13 லட்சம் கடன் வாங்கியிருந்தாராம்.
கடன் தொகைக்கு புவனேஸ்வரி காசோலை ஒன்று கொடுத்துள்ளார். அதை செல்வக்குமார் வங்கியில் செலுத்தினார். ஆனால் அவரது வங்கி கணக்கில் பணம் இல்லை என்று காசோலை திரும்பி வந்து விட்டதாகத் தெரிகிறது.
இதுகுறித்து செல்வக்குமார் மன்னார்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ந் தேதியன்று வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு மன்னார்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதுதொடர்பான வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. இந்த வழக்கில் புவனேஸ்வரி ஆஜராகவில்லை. இதை தொடர்ந்து நடிகை புவனேஸ்வரிக்கு நீதிபதி அய்யப்பன்பிள்ளை பிடிவாரண்டு பிறப்பித்துள்ளார்.
Post a Comment