
சென்னை : எம்.கே.எல் புரொடக்ஷன் தயாரிக்கும் படம், 'கனல்'. ஜெயகுமார் இயக்கி நடிக்கிறார். பவீனா ஹீரோயின். ஆதிஷ் உத்ரியன் இசை. இதன் பாடல் வெளியீடு சென்னையில் நடந்தது. அபிராமி ராமநாதன் வெளியிட, தயாரிப்பாளர் கேயார் பெற்றார். விழா முடிவில் டி.ஜெயகுமார் படம் பற்றி கூறும்போது, 'ஒரு கிராமத்தில் பெரிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து கொல்லப்படுகிறார்கள். அதை செய்வது ஊர் கருப்பசாமி என்று நம்புகிறார்கள். உண்மையில் கொலையாளி யார் என்பதை தொலைக்காட்சி குழுவினரும், போலீஸ் அதிகாரிகளும் கண்டுபிடிப்பதுதான் கதை' என்றார்.
Post a Comment