கள்ளத்துப்பாக்கி - தெலுங்கு தயாரிப்பாளர் கம் இயக்குநர் கைது

|

தமிழ்ப் படமான கள்ளத் துப்பாக்கிக்கும் இந்தச் செய்திக்கும் சம்பந்தமில்லைதான். ஆனால் விவகாரம் என்னவோ... கள்ளத் துப்பாக்கி சம்பந்தமானதுதான்.

இரண்டு கைத் துப்பாக்கிகளை கள்ள மார்க்கெட்டில் வாங்கியது தொடர்பாக தெலுங்கு தயாரிப்பாளரும் இயக்குநருமான சிவராமகிருஷ்ணா கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து 2 துப்பாக்கிகள் மற்றும் 14 புல்லட்களை ஜூப்ளி ஹில்ஸ் போலீசார் கைப்பற்றினர்.

பீகாரைச் சேர்ந்த ஒரு கும்பலிடமிருந்து கள்ள மார்க்கெட்டில் இந்தத் துப்பாக்கிகளை அவர் வாங்கியிருந்தார்.

விஷயம் தெரிந்து போலீசார் விசாரித்தபோது, முன்னுக்குப் பின் முரணாக உளறினாராம் சிவகிருஷ்ணா.

அவரை சட்டவிரோத ஆயுத கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

தெலுங்கில் நா பெல்லம் நா இஷ்டம் என்ற சர்ச்சைக்குரிய படத்தை தயாரித்து இயக்கியுள்ளார் இந்த சிவகிருஷ்ணா.

 

Post a Comment