தேவயாணி என் தேவதை: ராஜகுமாரன்

|

Devayani Is My Angel Says Rajakumar

தேவயாணியை முதன் முதலாக பார்க்கும் போது தேவதை போல இருந்தது. அதுதான் எனக்கு தேவயாணி மீது காதல் ஏற்பட காரணமாக அமைந்தது என்று அவருடைய கணவரும், இயக்குநருமான ராஜகுமாரன் கூறினார்.

ஜெயா டிவியில் சுகாசினி நடத்தும் ஆட்டோகிராப் நிகழ்ச்சியில் நடிகை தேவயாணி பங்கேற்றார். முன்பை விட இன்னும் இளமையாய், அழகாய் பேசும் தேவயாணியை புகழ்ந்தவாரே அவரின் பெர்சனல் பக்கங்களை கேட்டறிந்தார் சுகாசினி.

தேவயாணியை இயக்கிய இயக்குநர்கள் அகத்தியன், விக்ரமன் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்று தேவயாணியின் நடிப்பை, சினிமாத்துறையில் அவரின் அர்பணிப்பு உணர்வை பகிர்ந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய தேவயாணியின் கணவர் ராஜகுமாரன், தேவயாணி நடித்த படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய காலம் முதல் அவருக்கு கதை சொல்லி படம் இயக்கியது வரையிலான தகவல்களை தெரிவித்தார்.

வெள்ளை உடையில் தேவதை போல இருந்தால் தேவயாணி, அதனால்தான் நீ வருவாய் என படத்தில் "à®'ரு தேவதை வந்து விட்டாள் என்னைத் தேடியே" என்று பாடல் வைத்ததாக கூறினார். இருவரின் காதல் யாருக்குமே தெரியாது அந்த அளவிற்கு ரகசியமாக வைத்திருந்தோம் என்றும் கூறினார் ராஜகுமாரன்.

நிகழ்ச்சியில் பேசிய தேவயாணி, தன்னுடைய குழந்தைகள் நன்றாக தமிழ் பேசி எழுதுவதாக கூறினார். அவர்களிடம் இருந்து தான் தமிழ் எழுத கற்றுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். தான் சுகாசினியின் தீவிரமான ரசிகை, சிந்து பைரவி தனக்குப் பிடித்த திரைப்படம் என்று என்றும் கூறி நிகழ்ச்சி நடத்துனர் சுகாசினியை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் தேவயாணி. நிகழ்ச்சியின் இறுதியில் இருவரும் இணைந்து சின்னச் சின்ன ஆசை பாடலை இணைந்து பாடினர்.

ஆட்டோகிராப் நிகழ்ச்சி புத்தம் புது பொலிவுடன் சீசன் 2 தொடங்கியுள்ளது. வரும் ஞாயிறு முதல் இந்த நிகழ்ச்சியில் கூடுதலாய் விருந்தினர் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம். வரும் வாரம் (நவம்பர் 18) இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா சிறப்பு விருந்தினராக பங்கேற்று தன்னுடைய பெர்சனல் பக்கங்களை பகிர்ந்து கொள்கிறார்.

 

Post a Comment