
சென்னை : டாக்டர் வி.ராம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படம், 'ஹரிதாஸ்'. கிஷோர், சினேகா, மாஸ்டர் பிருத்விராஜ்தாஸ் நடிக்கிறார்கள். ஜி.என்ஆர்.குமரவேலன் இயக்குகிறார். விஜய் ஆண்டனி இசை. ரத்னவேலு ஒளிப்பதிவு. படத்தில் நடித்தது பற்றி கிஷோர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழில் வில்லனாகவும், குணசித்திர வேடங்களிலும் நிறைய நடித்திருக்கிறேன். இந்தப் படத்தில்தான் எமோஷனலான கதையின் நாயகனாக நடித்திருக்கிறேன். நான் பெரிய நட்சத்திரம் இல்லை. இன்னும் சொல்லப்போனால் நல்ல நடிகர்கூட இல்லை. என்னைப் போன்றவர்களை ஹீரோவாக வைத்து படம் எடுக்கும்போது தொழில்நுட்ப குழு பலமாக இருக்க வேண்டும்.
இந்தப் படத்தை பொறுத்தவரை நான் பெரிய ஆள் கிடையாது. படத்தின் இயக்குனர் குமரவேலன், ஒளிபதிவாளர் ரத்னவேலு, இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி, எடிட்டர் ராஜாமுகமது என இவர்கள்தான் இந்தப் படத்தை உருவாக்குகிறார்கள். நான் இயக்குனர் சொன்னதை செய்தேன். 'நடிக்கும்போது அழுதுவிட்டேன்' என்று சிலர் சொல்வதை கேட்டு கேலி செய்திருக்கிறேன். ஆனால் இந்தப் படத்தில் நடித்தபோது பல காட்சிகளில் அழுதேன். அப்போதுதான் நான் இன்னும் நடிப்பில் பாஸாகவில்லை என்று தெரிந்தது. முறைப்போடு வில்லனாக நடித்து விடலாம். அது எளிது. சென்டிமென்டாக நடிப்பது கஷ்டம் என்பதை உணர்ந்திருக்கிறேன்.
Post a Comment