நல்ல காலம் பொறக்குது...
'கன் பட ரிலீஸ் ஆகி இத்தனை நாள் தாண்டியும் கஜல் ஹீரோயின் படத்தை பாக்காம இருந்தாராம்... இருந்தாராம்... இதனால இணைய தள பக்கத்துல எந்த கருத்தயும் பகிர்ந்துக்க முடியாம தவிச்சாராம். ஒரு வழியா ரெண்டு நாளுக்கு முன்ன படத்த பாத்தாராம். இந்தி பட ஷூட்டிங்கிற்காக டெல்லியில இருந்தாராம் நடிகை. இடைவெளி இல்லாம ஷூட்டிங் நடத்தினதாலதான் படம் பார்க்க முடியலேன்னு பாலிவுட் யூனிட் மேல குறை சொல்றாராம்... சொல்றாராம்...
பாலிவுட் ஹீரோக்களவிட என்னோட பாய்பிரண்டே நல்லா இருக்காருன்னு கிர்ஸ்டென் ஹாலிவுட் நடிகை சொன்னாராம்... சொன்னாராம்... இத படிச்ச வேல்டு நாயகனோட வாரிசு நடிகை கொதிச்சிட்டாராம். பாலிவுட் ஹீரோக்கள கிண்டல் பண்ற இவர், ஏற்கனவே தன்னோட பாய்பிரண்ட கைகழுவிட்டு, இயக்கத்தோட சீக்ரெட்டா டச்ல இருந்தவரு. இப்ப அவர ஒதுக்கிட்டு பழைய பிரண்டோட ஒட்டிகிட்டாரு. இவரு பாலிவுட் ஹீரோக்களோட அழக பத்தி கிண்டலடிக்க¤றது தமாஷா இருக்குன்னு பொரிஞ்சி தள்ளிட்டாராம்... தள்ளிட்டாராம்... இதனால பாலிவுட் ஹீரோக்களோட கருணை பார்வை, வாரிசு நடிகை மேல விழுந்திருக்காம்... விழுந்திருக்காம்...
சுனேன நடிகை தமிழுக்கு வந்த புதுசுல நீங்க டாப்புக்கு போவீங்கன்னு நிறைய ஹீரோக்கள் நேர்லேயே புகழ்ந்தாங்களாம். சான்ஸ் இல்லாம தவிச்சப்போ அந்த ஹீரோக்களுக்கு தூது விட்டும் நடிகைக்கு பலன் கிடைக்கலையாம்... கிடைக்கலையாம்... இப்போ வாட்டர் பேர்ட் படம் ரிலீசாகப்போகுது. அதைத்தான் நடிகை மலைபோல் நம்பியிருக்காராம். இனிமே கவர்ச்சிக்கு டாடா காட்டவும் நடிகை முடிவு பண்ணிருக்காராம்... பண்ணிருக்காராம்...
Post a Comment