பெரிய நட்சத்திரங்கள் இல்லை, மாறுபட்ட லொக்கேஷன்கள் இல்லை, பறந்து பறந்து ஸ்டன் அடிக்கும் காட்சிகள் இல்லை.
முழுக்க சோனி பிக்சர்ஸ் அனிமேஷன் கற்பனையில் வடிவமைப்பில் உருவான படம். இயக்கியுள்ளவர் கெண்டி தார்த்தா கோவ்ஸ்கி (Genndy tartakousky).
ட்ராகுலா என்றால் ரத்தம், பீதி, மனிதர்களை கொல்வது என்று இதுவரை பயமுறுத்தியே வந்திருக்கிறார்கள். ஆனால் இந்த டிராகுலா மூலம் வயிறு வலிக்க சிரிக்க வைத்திருக்கிறார்கள். அதுவும் குழந்தைகளை கவர முடியும் நிரூபித்துள்ளனர்.
'ஹோட்டல் ட்ரான்சில்வேனியா' அனிமேஷன் பாத்திரங்களுக்கு ஆடம் சாண்ட்லர், ஆன்டி சம்பெர்க், ஜெயின் ஜெம்ஸ் போன்ற நட்சத்திரங்கள் குரல் கொடுத்துள்ளனர்.
கதை இதுதான்..
டிராகுலா ஒரு தங்கும் விடுதி கட்டி வைத்துள்ளது. அதன் வடிவமைப்பும் உரிமையும் அதற்கே சொந்தம். ஐந்து நட்சத்திர தகுதி கொண்ட ஹோட்டல் போன்று அனைத்து வசதிகளும் கொண்டது. மனித சஞ்சரமற்ற இடத்தில் அதை அமைந்துள்ளது. தன்னைப் போல டிராக்குலாக்கள், பூதங்கள் அங்கு வந்து தங்கிக் கொள்ளலாம் என்பதற்காக இந்த ஏற்பாடு.
ஒரு வார இறுதியில் தன் மகள் மேவிஸ்ஸின் 118வது பிறந்த நாளை பிரமாண்டமாகக் கொண்டாட நினைக்கும் டிராகுலா, தன் நண்பர்களை அழைக்கிறது. மம்மி, இன்விசியின்மேன் போன்ற பூத கணங்கள் தங்கள் துணையுடன் அங்கு வருகின்றன. பிரமாண்டமானவர்கள் பயங்கரமானவர்கள் கூட்டம் கூடுகிறது. ஆனால் சில எதிர்பாரதவை நடக்கின்றன.
டிராகுலாவுக்கு மனித சஞ்சரம் பிடிக்காது. அதுபோல் காதலும் பிடிக்காது. இவை இரண்டின் நிழல் இல்லாமல் தன் மகள் மேவியை 118 வயது வரை வளர்த்து விட்டது. ஆனால் அவ்வளவு பாதுகாப்பையும் கடந்து அந்த இரண்டும் யதேச்சையாக அங்கே நுழைந்து விடுகின்றன.
மகளை காப்பாற்ற டிராகுலா படும்பாடு நகைச்சுவை ரணகளம். இப்படி முழுக்க சிரிக்க வைக்கும்படி உருவான இந்தப்படம் வசூலான படங்களின் வசூலை அசைத்து முதலிடம் பெற்று பெற்று முந்தியுள்ளது என்றால் பாருங்களேன்.
செப்டம்பர் 28ல் வெளியாகி அடுத்த இரண்டு நாட்களில் வசூலில் பிற படங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டது. நவம்பர் 25 வரையிலான வசூல் 291 455 525 டாலர்கள். அதாவது 85 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்ட படம் குறுகிய காலத்தில் 291 மில்லியன் டாலர்களை அள்ளியிருக்கிறது (பாத்துப்பா... துப்பாக்கிகாரங்க ஒத்துக்க மாட்டாங்க!).
இந்த அதிரடி வசூலையடுத்து இதன் அடுத்த பாகத்தை 2015ல் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளனர்.
+ comments + 1 comments
Dai entha news ku yenn da vijay ah vambuku ilukuringa vera velaiye illaya da ungaluku
Post a Comment