ரஜினி நடிக்கும் தளபதி பார்ட்- 2 : மணிரத்னம் முடிவு

|

Rajinikanth starrer Thalapathi Part - 2: Mani Ratnam results மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி நடித்த படம் 'தளபதி'. மற்றொரு ஹீரோவாக மம்முட்டி நடித்திருந்தார். இப்படத்தின் 2 -வது பாகம் உருவாக்குவது பற்றி மணிரத்னம் யோசித்து வந்தார். சமீபத்தில் ரஜினியை சந்தித்து இதுபற்றி அவரிடம் கூறினார். ரஜினியும் அதற்கு சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தற்போது 'கடல்' படத்தை இயக்கி வரும் மணிரத்னம் படத்தை ஜனவரியில் ரிலீஸ் செய்ய உள்ளார். இப்படத்தின் வேலைகள் முடிந்ததும் 'தளபதி 2' படத்தின் ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் மணிரத்னம் முழு கவனம் செலுத்த உள்ளார். 'கோச்சடையான்' பட ரிலீசில் தற்போது ரஜினி பிஸியாக இருக்கிறார். அப்படம் வெளியானதும் மீண்டும் மணிரத்னம் ரஜினியை சந்தித்து 'தளபதி பார்ட் 2' பற்றி ஆலோசிக்க உள்ளார்.
Rajinikanth starrer Thalapathi Part - 2: Mani Ratnam results
 

Post a Comment