புவனேஸ்வரி மீது பாய்ந்தது 2வது வழக்கு...!

|

2nd Case Slapped On Actress Buvaneswari

சென்னை: கவர்ச்சி நடிகை புவனேஸ்வரி மீது 2வது வழக்குப் பாய்ந்துள்ளது. காரை விற்று விட்டு மறுபடியும் அதை திரும்ப எடுத்து்ச் சென்று மோசடி செய்ததாக புவனேஸ்வரி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவரைக் கைது செய்த போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர்.

சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் டிரைவ் இன் தியேட்டருக்கு தனது ஆதரவாளர்களோடு போய் பெரும் ரகளையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து புவனேஸ்வரி உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்,.

இந்த நிலையில் புவனேஸ்வரி மீது மடிப்பாக்கம் விநாயகராஜ் என்பவர் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில்,நடிகை புவனேஸ்வரியிடம் இருந்த ஒரு காரை கடந்த ஆண்டு ரூ.6 லட்சத்திற்கு வாங்கினேன். முதல் தவணையாக அந்த காருக்கு ரூ.5 லட்சம் தந்து விட்டு, காரை வீட்டிற்கு எடுத்து வந்தேன். ஆனால் மறுநாள் புவனேஸ்வரி அனுப்பியதாக கூறி ஒருவர் வந்தார். புவனேஸ்வரி விற்ற காரில், அவரது புடவை இருக்கிறது என்று சொல்லி அவர் காரை புவனேஸ்வரியின் வீட்டுக்கு எடுத்துச்சென்று விட்டார். மீண்டும் காரை திருப்பித் தரவில்லை.

இதுகுறித்து நான் போய்க் கேட்டபோது, புவனேஸ்வரி திரும்பத்தர மறுத்து விட்டார். அத்துடன் அவரும், அவரது ஆட்களும் என்னை மிரட்டினர் என்று கூறியுள்ளார் விநாயகராஜ்.

இந்தப் புகாரை வாங்கி வழக்குப் பதிவு செய்த மடிப்பாக்கம் போலீஸார் புழல் சிறைக்குப் போய் புவனேஸ்வரியை இந்த வழக்கில் கைது செய்தனர். பின்னர் அவரை ஆலந்தூர் கோர்ட்டுக்குக் கொண்டு போய் நிறுத்தி அந்த வழக்கில் ரிமாண்ட் பெற்று மீண்டும் சிறையில் கொண்டு வந்து அடைத்தனர்.

புவனேஸ்வரி மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. அவரை குண்டர் சட்டத்தின் கீழும் போலீஸார் கைது செய்யக் கூடும் என்ற பேச்சும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment