
சென்னை : வசந்த் இயக்கியுள்ள படம், 'மூன்று பேர் மூன்று காதல்'. அர்ஜுன், சேரன், விமல், பானு, சுர்வீன், லாசினி நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசை. இதன் பாடலை கே.பாலசந்தர் வெளியிட, கே.பாக்யராஜ், கே.எஸ்.ரவிகுமார், பிரகாஷ்ராஜ் பெற்றனர். பின்னர் கே.பாலசந்தர் பேசும்போது, 'இந்த பாடல்களை பார்க்கும்போது யுவன் சிகரத்தை தொட்டுவிட்டார் என்று தெரிகிறது. நா.முத்துக்குமாரும் பாடல்களில் சிகரம் தொட்டிருக்கிறார். ரிலீஸுக்கு பிறகு வசந்தும் சிகரம் தொடுவார். வசந்த் என்னிடம் பணியாற்றினாலும் என்னைவிட சிறப்பாகப் படம் எடுப்பவர். எனக்குப் பிறகு என் இடத்தை நிரப்புவது அவர்தான்' என்றார்.
வசந்த் பேசும்போது, 'குறிஞ்சி, மருதம், நெய்தல் என்ற மூன்று வகையான திணைகளில் உருவாகும் காதல்தான் படம். மூன்று காதலும் ஒரு புள்ளியில் இணைவது கிளைமாக்ஸ். எனது மற்ற படங்களில் இருந்து வித்தியாசமாக இருக்கும். நான் இயக்கிய படங்களில் இது சிறப்பானதாக இருக்கும்' என்றார். லிங்குசாமி, சசி, சரவணன், நா.முத்துகுமார், அறிவுமதி, தமிழச்சி தங்கபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர்கள் மஹேந்திரன், பாரத்குமார், மஹா அஜய் பிரசாத் நன்றி கூறினர்.
Post a Comment