அஜீத் ஜோடி ஆனார் தமன்னா

|

thaamana விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படத்தில் அஜீத் ஜோடியாக தமன்னா நடிக்கிறார்.ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார் அஜீத். இதற்கிடையே விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பாரதி ரெட்டி, வெங்கட்ராம ரெட்டி தயாரிக்கும் படத்தில் அஜீத் நடிக்கிறார். இதை 'சிறுத்தை' சிவா இயக்குகிறார். இதில் அஜீத் ஜோடியாக நடிக்க ஹீரோயின் தேடி வந்தனர். இப்போது தமன்னா ஒப்பந்தமாகி உள்ளதாக இயக்குனர் சிவா தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது, 'படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இது கமர்சியல் படம். விதார்த், பாலா, முனீஷ், சோஹைல் ஆகிய இளம் ஹீரோக்களும் அஜீத்துடன் நடிக்க உள்ளனர். காமெடிக்கு ஜெயராமும், சந்தானமும் இணைகின்றனர். தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். மார்ச் மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது' என்றார்.

 

Post a Comment