ஹரிதாச பட பேரோட உருவாகுற பட நிகழ்ச்சில பாலுவான மகேந்திர இயக்கம் கலந்துகிட்டு இயக்கத்தை குறை சொன்னாராம்... சொன்னாராம்... 'படத்துல நடிச்ச பையன் சில சீன்ல தூங்கற மாதிரி தெரியுது. அத கவனிக்காம இயக்கம் படத்த எப்படி எடுத்தாருன்னு ரிவிட் அடிச்சாராம்... அடிச்சாராம்... இதுக்கு இன்னொரு நிகழ்ச்சில பதில் சொன்ன குமர இயக்கம், 'கதைப்படி பையனுக்கு ஒருவித நோய் இருக்கு. அதுக்காக அக்காட்சி படமாக்கப்பட்டது. பாலு இயக்கத்துக்கு கதை தெரியாது. அதனால அப்படி பேசிட்டாரு. முழுசா படம் பாக்கறப்போ இது புரியும்னு பல்ல கடிச்சிட்டே சொன்னாராம்... சொன்னாராம்...
ஈர படத்துல நடிச்ச பூரண நடிகைக்கு கோலிவுட் கைகொடுக்கலயாம்... கைகொடுக்கலயாம்... இதனால வேற லாங்குவேஜ்ல கவனத்த திருப்பிட்டாராம். அவரோட தோற்றம் ஹோம்லியா இருக்க¤றதால கிளாமர் வேடங்கள் வரலயாம். நடிகையும் காத்திருந்து காத்திருந்து சொந்த மலையாள தேசத்துக்கே போயிட்டாராம்... போயிட்டாராம்...
காஜல் ஹீரோயின் பாலிவுட்டுக்கு போறப்ப தோழி இல்லாம வெறும் கையோடு போனாராம்... போனாராம்... பிசின் நடிகயோட விளம்பர படத்துல நடிச்சாலும் அவர்கிட்ட நெருக்கம் குறைவாவே இருந்துச்சாம். சமீபத்துல கோவாவுல பிலிம் பெஸ்டிவல்ல டபு ஹீரோயினை பாத்தப்ப ரெண்டுபேரும் கட்டிபிடிச்சிட்டாங்களாம். டோலிவுட் படத்துல சேந்து நடிச்ச கதைய மணிக்கணக்குல பேச¤னாங்களாம்... பேசினாங்களாம்... அப்படியே, தெரிஞ்ச பாலிவுட் இயக்குனர்கள்கிட்ட அறிமுகப்படுத்தி வைய்யுங்களேன்னு டபு நடிகைக்கு காஜலானவரு கோரிக்கை வச்சாராம்... வச்சாராம்...
Post a Comment