இத்தடையை எதிர்த்து கர்நாடக கிரஹகார சங்கம் மற்றும் டப்பிங் மொழி படங்களை ரிலீஸ் செய்யும் விநியோகஸ்தர் கணேஷ் சேத்தன் ஆகியோர் டெல்லியில் உள்ள காம்பொடிஷன் கமிஷன் ஆப் இந்தியா (சிசிஐ) என்ற அமைப்பிற்கு புகார் அனுப்பி உள்ளனர். சிசிஐ அமைப்பு என்பது மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள அமைப்பாகும். எந்த தொழிலிலும் ஆரோக்கியமான போட்டி உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே இந்த அமைப்பின் நோக்கமாகும்.
கன்னட படவுலகினரின் தடை குறித்து தரப்பட்டுள்ள புகாரை ஏற்றுக்கொண்ட சிசிஐ, 'பிறமொழி படங்களை கன்னடத்தில் டப்பிங் செய்யவோ, ரிலீஸ் செய்யவோ அனுமதிக்காதது ஏன்? என்பதற்கு விளக்கம் கேட்டு கர்நாடக பிலிம் சேம்பருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. கர்நாடக தயாரிப்பாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம், திரைப்பட தொழிலாளர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அமைப்பு, கர்நாடக சலனசித்ர அகாடமி, கர்நாடக டிவி சங்கம் ஆகியவற்றுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.
Post a Comment