எத்தனைவாட்டிதாங்க ரகசிய கல்யாணம் பண்ணிக்கிறது!! - லட்சுமிராய் சலிப்பு

|

No Truth Secret Marriage Says Lakshmi Rai   

எத்தனை முறைதான் மீடியாக்காரர்கள் எனக்கு கல்யாணம் பண்ணிப் பார்ப்பார்களோ, அதுவும் ரகசியமாக என சலித்துக் கொள்கிறார் லட்சுமி ராய்.

நடிகை லட்சுமிராய்க்கு ரகசிய திருமணம் நடந்ததாக பரபரப்பாக தகவல் வெளியாகி வருகிறது.

தொழில் அதிபர் ஒருவரை யாருக்கும் தெரியாமல் திருமணம், செய்து கொண்டு குடும்பம் நடத்துவதாக அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து லட்சுமிராயிடம் கேட்டபோது, "என்னைப் பற்றி தவறான வதந்திகளை யாரோ பரப்பி வருகிறார். எத்தனை முறைதான் எனக்கு ரகசியமாக திருமணம் செய்து பார்ப்பார்களோ தெரியவில்லை.

உண்மையில் இப்போது எனது சகோதரிக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. அதற்காக திருமண அழைப்பிதழ்கள் கொடுத்து வருகிறேன். அதை வைத்து எனக்கு திருமணம் என்று புரளி கிளப்பியுள்ளார்கள் போலிருக்கிறது," என்றார்.

 

Post a Comment