நடிகர் தனுஷ் சிவ கார்த்திகேயன், பிரியா ஆனந்த் ஆகியோரை வைத்து செந்தில் இயக்கியுள்ள எதிர் நீச்சல் படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு கொலவெறி பாடல் புகழ் அனிருத் இசையமைத்துள்ளார். இசை உரிமையை சோனி நிறுவனம் பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளது என்று தெரிகிறது.
இந்த படத்தில் தயாரிப்பாளர் தனுஷ் ஒரு பாட்டுக்கு வந்து ஆடுவார் என்று கூறப்பட்டது. அவர் ஒன்றும் தனியாக ஆடவில்லை. நயன்தாராவுடன் சேர்ந்து தனுஷ் குத்தாட்டம் போட்டுள்ளார். முன்னதாக சிவகாசி படத்தில் விஜயுடன் நயன் ஆடிய கோடம்பாக்கம் ஏரியா, சிவாஜி படத்தில் ரஜினிகாந்துடன் ஆடிய பல்லேலக்கா ஆகிய பாடல்கள் சூப்பர் ஹிட்டானது.
இந்நிலையில் தற்போது தனுஷுடன் நயன் ஆடிய பாடலும் சூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாடல் கடந்த 2 நாட்களாக படமாக்கப்பட்டது.
எதிர் நீச்சல் படம் வரும் 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
Post a Comment