சேலையில் சாமி படம்... குஷ்பு வீட்டை முற்றுகையிட்ட இந்து மக்கள் கட்சி

|

Hmk Protests Against Kushboo

சென்னை: சாமி படம் போட்ட சேலையை அணிந்து சினிமா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை குஷ்புவைக் கண்டித்து அவரது வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த இந்து மக்கள் கட்சியினர் முயன்றனர். அவர்களைப் போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த சினிமா இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட குஷ்பு, சாமி படம் போட்ட சேலையை அணிந்திருந்தார். இந்துக்கள் மதிக்கும் கடவுள்கள் படங்களைப் போட்ட சேலையை மார்பில் அணிந்து வந்து இந்துக்களை இழிவுபடுத்தி விட்டார் குஷ்பு என உடனடியாக எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன.

இந்த நிலையில் சென்னையில் உள்ள குஷ்புவின் வீட்டை முற்றுகையிட்டு இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்த முயன்றனர். அவர்களைப் போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

ஆனால் தங்களது போராட்டம் நிற்காது என்றும், குஷ்பு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் பெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் எச்சரித்தனர். ஆனால் வேலையில்லாத வெட்டிப் பயல்கள்தான் இப்படி எதிர்ப்புக் குரல் எழுப்புகிறார்கள் என்ற ரீதியில் ஏற்கனவே இந்த விவகாரம் குறித்து குஷ்பு கருத்து தெரிவித்து விட்டார் என்பது நினைவிருக்கலாம்.

 

+ comments + 1 comments

16 December 2012 at 16:50

Hindu religion found to be funny for actress, they have give respect to the people's opinion, they may be no god fearing but respect to others

Post a Comment